May 04 2018 - 02:06
சுவாமி விபுலாந்தரின் 126வது பிறந்த தினம் 03.05.2017 மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் மாநகர உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், வலயக்கல்விப்பணிப்பாளர், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
April 26 2018 - 18:34
முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட ஐவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் இன்று (26) உத்தரவிட்டார். அத்துடன், மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தொகுபப, இந்த மாத இறுதியில் மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
April 26 2018 - 18:31
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய சில பதவிகளில் ​நேற்றிரவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற அரசியற்குழு கூட்டத்திலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில், கட்சியின் பொதுச் செயலாளராக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். தவிசாளராக அமைச்சர் கபீர் ஹாசீம்...
April 26 2018 - 18:24
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையிலான சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச் .டி .கே .எஸ் கபில ஜயசேகர தலைமையில் இன்று மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெற்றது இடம்பெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் , சிறுவர்களினதும் பல வினோத...
April 25 2018 - 17:54
மட்டக்களப்பு உதயம் வழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கொடி வாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் மே முதலாம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வாக, இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு எம்.உதயகுமாருக்கு முதல் கொடி அணிவிக்கப்பட்டு கொடிவாரம் ஆரம்பிக்கப்பட்டது.
April 25 2018 - 17:50
தந்தை செல்வா அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இரத்தான நிகழ்வு… இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் 2018.04.26ம் திகதி மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சி மாவட்டக் காரியாலயத்தில் காலை 08.30 மணிக்கு இரத்ததான நிகழ்வு...
April 25 2018 - 17:47
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை, நாளை (26) வரை ஒத்திவைத்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் இன்று (25) உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்...
April 25 2018 - 09:00
மட்டக்களப்பு மாவட்டத்தில், பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலிகளால் பொதுமக்களும் வாகன சாரதிகளும் பெரும் அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு பிரதான வீதிகளில் அலைந்து திரியும் பெருமளவிலான கட்டாக்காலி மாடுகளால், அடிக்கடி வீதி விபத்துகள் ஏற்படுவதுடன், வாகன சாரதிகளும் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பாதையில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், அதிகமான கட்டாக்காலி...
April 25 2018 - 08:58
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டால், இவ்வருட இறுதிக்குள் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தமுடியுமெனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, “அந்தக் கோரிக்கையை, சகல கட்சிகளின் செயலாளர்களிடமும் விடுக்கவுள்ளேன்” என்றார். ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர்...
April 24 2018 - 18:31
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயக பிரிவின் அமிர்தகழி கிராம இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் அமிர்தகழி கிராம சிரேஷ்ட பிரஜைகளின் ஒத்துழைப்புடன் புதுவருட கலை கலாசார விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நேற்று பிற்பகல் அமிர்தகழி ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது தமிழ் பாரம்பரிய கலாசாரத்தை நினைவு படுத்தும் வகையில் கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது . இதன்போது போட்டிகளில் பங்குபற்றி...

செய்திகள்:

22.10.2011
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் ஒன்றான பாட்டாளிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு தொகுதி பாண்ட் வாத்திய கருவிகளை அன்பளிப்புச் செய்துள்ளார். இந் நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் பிரதி அதிபர் தலைமையில் இடம் பெற்றது. பல கஸ்டத்தின் மத்தியில் கல்வி பயின்று வரும் மாணவர்களின் நன்மை கருதி...
22.10.2011
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் மற்றும் நீனாக்கேணியை அண்டிய மீளக் குடியேறிய மக்களை (21.10.2011) கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடல் மூலம் அம் மக்கள் எதிர் நோக்குகின்ற உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. தொடர்ந்தும் அம் மக்களது பிரச்சினைகளுக்குhன உரிய...
22.10.2011
அண்மையில் ஓர் பத்திரிகையிலே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் அறிக்கை அரசனுமான அரியனேந்திரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார், அவுஸ்ரேலியாவிலே இருக்கின்ற வடமாகாண மக்கள் ஒன்றியம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்ற பல செயற்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள் என்று. அதுவும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழ பிரதேசம் என்பதனாலே தான் அவர்கள்...
21.10.2011
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணே தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலைசடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21.10.2011
1. அரபு தேசத்தின் கதட்ஃபா (ஞரயனாயனாகய) எனும் பூர்வீக குடியினத்தில் 1942ம் ஆண்டு ஜூன்இ 7ம் திகதி பிறந்தார். பலஸ்தீன எழுச்சிக்கு மிகுந்த ஆதரவு கொடுத்தார். 1948ம் ஆண்டு இஸ்ரேலிடம் பலஸ்தீனம் தோல்வி அடைந்த போது மிகுந்த மனவேதனை அடைந்தார். 2.அப்போதைய எகிப்திய அதிபர் கமல் அப்தெல் நாஸரை தனது ரோல் மாடலாக எடுத்துக்கொண்டார். இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார். ஐரோப்பாவின் ஐக்கிய...
20.10.2011
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை ஏ15 வீதியில் அமைந்துள்ள 5 மிகப் பெரிய பாலங்கள் (19.10.2011) பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. கிண்ணியா உப்பாறு, கங்கை, இறால்குழி, வெருகல், காயாங்கேணி ஆகிய பாலங்களே இன்று திறந்து வைக்கப்பட்டன. மேற்படி பாலங்களும் 99மீற்றர் நீளமான வீதியும்  திறந்து வைக்கப்பட்டன. இதன் மூலம் பல மக்கள் நன்மையடைய இருக்கின்றனர்....
20.10.2011
பல்வேறு உட்கட்டமைப்புக்களுடன் கூடிய வகையில் கிழக்கு மாகாணம் துரித அபிவிருத்தி கண்டு வருகின்றது. இந் நிலையினைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் பழம் பெருங் கட்சி என இனங்காட்டும் த.வி.கூட்டணி போன்ற கட்சிகளை ஏவி விட்டு வெளிநாட்டிலுள்ள சில சக்திகள் கிழக்கின் இயல்பு நிலையை குழப்ப முயற்சிகள் பல எடுத்த வண்ணமே உள்ளார்கள். இவர்களை மக்களே இனங்கண்டு அவர்களுக்கு...
20.10.2011
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபையை பொறுப்பேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி கண்டு வருகின்றது. தொடரும் அபிவிருத்தித் திட்டங்களில் வீதி அபிவிருத்தித் திட்டங்களும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 02.11.2011 அன்று பட்டிப்பளை பிரதேசத்துக்குட்பட்ட முனைக்காடு காளி கோவில் வீதி நாகமுனைவீதி தாலையடித்தெரு எனும் வீதிகளின் நிர்மாணப்...
20.10.2011
திருகோணமலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாவட்டச் செயலகம் (18.10.2011) பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திருமலை கண்டி வீதி 4ம் கட்டைச் சந்திக்கருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலகமே மேற்படி திறந்து வைக்கப்பட்டது. சுமார் 40கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் சகலவசதிகளும் அமையப் பெற்றிருக்கின்றமை விசேட அம்சமாகும்....
19.10.2011
2012 ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவினம் 128,428,44,71000 ரூபா (நூற்றியிருப்பத்தெட்டாயிரத்து நானூற்றியிருபத்தெட்டு கோடி நாற்பத்து நான்கு இலட்சத்து எழுபத்தோராயிரம் ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது. தேவையான நிதியை திரட்டுகையில் நூற்றிப்பதினையாயிரம் கோடியை விட அதிகரிக்கக் கூடாது என நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது....
19.10.2011
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி இன்று பகல் நீர்வழங்கல் திட்டத்திற்கான நினைவுப் படிகல்லை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் அத்திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார்.  இந் நிகழ்வில்,  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வீ.முரளிதரன், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் நிருபமா ராஜபக்ச, கூட்டுறவு...
19.10.2011
மண்முனைப் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தில் தளபாட விற்பனை நிலையம் இன்று காலை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிராந்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இவ் விற்பனை நிலையம் மூலம் இலங்கையின் தரச்சிறப்புமிக்க தளபாடங்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடிவதுடன் இலகு தவணை முறையிலும் தளபாடங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். உலகத்தரம் வாய்ந்த தளபாடங்களை ஒரே இடத்தில்...