விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. மேலும் விஜய்யின் படங்களில் இந்த மெர்சல் ரூ 250 கோடி கிளப்பில் இணைந்தது. ஆனால் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது.

இதில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா என சில விசயங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் மெடிக்கல் துறை சம்மந்தப்பட்ட மோசடிகள் குறித்து வசனங்கள் இடம் பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் பெங்களூரில் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் பெரும் மோசடி நடந்துள்ளது. இதில் சில முக்கிய மருத்துவர்களும், அதிகாரிகளும் சிக்கியுள்ளனர்.

அதிரடியாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 100 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது கோயம்பத்தூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உப்புச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்தமுறை RK நகர் தேர்தலில் கங்கை அமரன் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தற்போது மெர்சல் 250 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்க அவர்களுக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்துவருகிறது. படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கவுள்ளது.

விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் எந்திரன் மட்டும் தான் 100 கோடி வசூலை தாண்டிய படம் என்று பெருமையை பெற்றுருந்தது.

இந்நிலையில் தற்போது வந்த தகவல் படி எந்திரன் வசூல் செய்த 108 கோடி யை மெர்சல் முறியடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

விரைவில் இப்படத்தின் முழு வசூல் விவரமும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடிக்கு வசூலித்துள்ளது.

விரைவில் படம் ஐ பட வசூல் சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் 62வது படத்தை பற்றிய பேச்சுகள் வர ஆரம்பித்துவிட்டன. முருகதாஸுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைவதால் படத்திற்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் நாயகி யார் என்ற வேட்டையில் படக்குழு ராகுல் ப்ரீத் அல்லது பாலிவுட் நாயகி சோனாக்ஷியை கமிட் செய்த யோசித்து வருகின்றனராம்.

மெர்சலில் சொல்லப்பட்ட விஷயம் பலித்துவிட்டதோ! ரியலாக நடந்த சம்பவம்
05.12.2017
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் பிளாக்...
பிரபல இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி
05.12.2017
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது...
மெர்சல் 250 கோடி
23.11.2017
தளபதி விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளிலிருந்தே...
எந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் !
04.11.2017
விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த...
விஜய்யின் 62வது படம்- லிஸ்டில் இருக்கும் 2 நாயகிகள், இசையமைப்பாளர் இவரா?
03.11.2017
ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த...

சினிமா

21.04.2017
இளையதளபதி விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ள படம் விஜய் 61. விஜய் இதில் மூன்று தோற்றத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. இது குறித்து சில தகவல்கள், ஒரு சில புகைப்படங்கள் என சமூக வலைதளத்தில் வந்ததை பார்த்திருப்பீர்கள். தற்போது அப்படத்தின் ஒரு கெட்டப்காக அவர் கிளீன் சேவ் செய்து நடிக்கிறாராம். இந்த விஜய்க்கு ஜோடியாக தான் காஜல் நடிக்கிறாராம். பாடல்களுக்காக படக்குழு சீக்கிரம் வெளிநாடு...
05.02.2016
தெறி படத்தை தொடர்ந்து ‘இளைய தளபதி’ விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடிக்கவுள்ளார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை விஜய் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளார். அதேபோல் வேதாளம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட அஜித், தற்போது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில்...
28.01.2016
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் என டாப் நடிகர்களின் படத்துக்கு இசையமைத்து வெற்றி இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். இந்நிலையில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான பவன் கல்யாண் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார். எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் குஷி 2வில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வந்துள்ளன. ஆனால் அச்செய்திகள் இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் இப்பட தகவல்கள்...
21.01.2016
காதல் திருமணம்தான் செய்வேன் என்று ஒற்றைக் காலில் நின்ற நடிகர் சிம்பு, பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார். நயன்தாராவுடனான காதல் முறிவு, ஹன்சிகாவுடனான காதல் முறிவு ஆகியவை சிம்புவை ரொம்பவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இருந்தும் தான் காதல் திருமணம்தான் செய்துகொள்வேன் என்று விடாபிடியாக இருந்தவருக்கு, அண்மையில் காதல் தோல்வியை பற்றிய சிம்புவின் பீப் பாடல்...
21.01.2016
விஜய் நடிக்கவுள் அடுத்தத் திரைப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக காஜலுக்கு இரண்டரை கோடி இந்திய ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி, ஜில்லா திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த காஜல் அகர்வாலை, விஜய்யே சிபாரிசு செய்ததாகவும், அதனாலேயே அவருக்கு இரண்டரை கோடி சம்பளம் கொடுத்துள்ளதாகவும் தகவல். தெறி படப்பிடிப்பு முடித்த கையோடு...
12.08.2015
திரிஷாவின் சினிமா வாழ்க்கை சாதாரண துணை நடிகையாகவே தொடங்கியது. ‘ஜோடி’ படத்தில் சிம்ரன் தோழியாக வந்தார். 1999-ல் இந்த படம் வெளியானது. அதன்பிறகு மூன்று வருடங்கள் படங்கள் இல்லாமல் சும்மா இருந்தார். பிறகு அவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமான லேசா லேசா வெற்றிப்படமாக அமையவில்லை. 2002-ல் ‘மவுனம் பேசியதே’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. தொடர்ந்து திரையுலகில் ஏறுமுகம் ஆனார்....
27.07.2015
ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி இருந்த படம் பாகுபலி.படம் வெளியான இரு வாரங்களில் ரூ. 350 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்து. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பிரபாஸை அழைத்து வாழ்த்து கூறியுள்ளார். இதுபற்றி பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதோடு, படத்தையும் வெளியிட்டுள்ளார்.நேற்று இந்த சந்திப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும்...
20.07.2015
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகர்களில் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர்கள் அஜித், விஜய். இவர்களுக்கு அடுத்த இடத்தில் சூர்யா, விக்ரம் உள்ளனர்.இனி இவர்கள் படங்கள் பெரிய பிரச்சனையில் சிக்க வாய்ப்புள்ளது. அது என்னவென்றால் இனி ரூ 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தங்கள் படங்கள் தோல்வி அடைந்தால் சம்பளத்தில் இருந்து 25% விநியோகஸ்தர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்.ஆனால், இந்த 25%...
20.07.2015
மறைந்த "மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவைப் போற்றும் வகையில், இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் சென்னையில் வருகிற 27-ஆம் தேதி இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை (ஜூலை 27) மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த இசை அஞ்சலி நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் இளையராஜாவின் குழுவினர், எம்.எஸ்.விஸ்வநாதனின் சாகாவரம் பெற்ற பாடல்களை இசைத்துப் பாடுகின்றனர். எம்.எஸ்....
22.06.2015
(தமிழனுக்கு எங்சியது இது மட்டும்தான்) கிழக்கு மாகாணசபையில் 170 தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு தற்போதைய ஆட்சி மாற்றத்தினால் கிழக்கு மகாகாணசபையில் தமிழ் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளில் பல முறைக்கேடுகள் நடைபெறுகிறது. சுகாதார அமைச்சின் கீழ் கிழக்கு மாகாணம் முழுவதுமாக 419 சுகாதார சிற்றூழியர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளது. இன விகிதாசார அடிப்படையின் கீழ் தமிழர்களுக்கு 170...