இளையதளபதி விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ள படம் விஜய் 61. விஜய் இதில் மூன்று தோற்றத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது.

இது குறித்து சில தகவல்கள், ஒரு சில புகைப்படங்கள் என சமூக வலைதளத்தில் வந்ததை பார்த்திருப்பீர்கள். தற்போது அப்படத்தின் ஒரு கெட்டப்காக அவர் கிளீன் சேவ் செய்து நடிக்கிறாராம்.

இந்த விஜய்க்கு ஜோடியாக தான் காஜல் நடிக்கிறாராம். பாடல்களுக்காக படக்குழு சீக்கிரம் வெளிநாடு செல்ல இருக்கிறதாம். வழக்கமாக மீசை தாடியை ட்ரிம் செய்தே இருக்கும் விஜய் அப்படி ஒரு கெட்டப்பில் எப்படி இருப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தெறி படத்தை தொடர்ந்து ‘இளைய தளபதி’ விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடிக்கவுள்ளார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை விஜய் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் என டாப் நடிகர்களின் படத்துக்கு இசையமைத்து வெற்றி இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத்.
இந்நிலையில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான பவன் கல்யாண் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்.
எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் குஷி 2வில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வந்துள்ளன. ஆனால் அச்செய்திகள் இன்னும் உறுதியாகவில்லை.
இந்நிலையில் இப்பட தகவல்கள் உறுதியானால் அதில் இசையமைப்பாளராக அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.
பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இப்படத்தை North Star Entertainments பேனரில் ஷரத் மரார் தயாரிக்க இருக்கிறார்.

காதல் திருமணம்தான் செய்வேன் என்று ஒற்றைக் காலில் நின்ற நடிகர் சிம்பு, பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார். நயன்தாராவுடனான காதல் முறிவு, ஹன்சிகாவுடனான காதல் முறிவு ஆகியவை சிம்புவை ரொம்பவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இருந்தும் தான் காதல் திருமணம்தான் செய்துகொள்வேன் என்று விடாபிடியாக இருந்தவருக்கு, அண்மையில் காதல் தோல்வியை பற்றிய சிம்புவின் பீப் பாடல் பிரச்சினையும் அவரை மிகவும் மன வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இந்த வேதனையிலிருந்து சிம்புவை மீட்க அவரது பெற்றோர்களும் அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

விஜய் நடிக்கவுள் அடுத்தத் திரைப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக காஜலுக்கு இரண்டரை கோடி இந்திய ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி, ஜில்லா திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த காஜல் அகர்வாலை, விஜய்யே சிபாரிசு செய்ததாகவும், அதனாலேயே அவருக்கு இரண்டரை கோடி சம்பளம் கொடுத்துள்ளதாகவும் தகவல். தெறி படப்பிடிப்பு முடித்த கையோடு விஜய்யின் 60ஆவது திரைப்படத்தின் பூஜை, விஜயா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் மிக எளிமையான முறையில் அண்மையில் நடைபெற்றது.

விஜய் 61 ல் விஜய்க்கு அப்படி ஒரு கெட்டப்பா? ஜோடி யார் தெரியுமா
21.04.2017
இளையதளபதி விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில்...
அடுத்த மோதலுக்கு தயாராகும் அஜித் - விஜய்
05.02.2016
தெறி படத்தை தொடர்ந்து ‘இளைய தளபதி’ விஜய், பரதன்...
சூப்பர் ஸ்டார் படத்துக்கு அனிருத் இசை!
28.01.2016
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் என டாப்...
சிம்புவுக்கு கல்யாணம்?
21.01.2016
காதல் திருமணம்தான் செய்வேன் என்று ஒற்றைக் காலில்...
ஹெட்ரிக் ஜோடி
21.01.2016
விஜய் நடிக்கவுள் அடுத்தத் திரைப்படத்தில் விஜய்...

சினிமா

12.08.2015
திரிஷாவின் சினிமா வாழ்க்கை சாதாரண துணை நடிகையாகவே தொடங்கியது. ‘ஜோடி’ படத்தில் சிம்ரன் தோழியாக வந்தார். 1999-ல் இந்த படம் வெளியானது. அதன்பிறகு மூன்று வருடங்கள் படங்கள் இல்லாமல் சும்மா இருந்தார். பிறகு அவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமான லேசா லேசா வெற்றிப்படமாக அமையவில்லை. 2002-ல் ‘மவுனம் பேசியதே’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. தொடர்ந்து திரையுலகில் ஏறுமுகம் ஆனார்....
27.07.2015
ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி இருந்த படம் பாகுபலி.படம் வெளியான இரு வாரங்களில் ரூ. 350 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்து. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பிரபாஸை அழைத்து வாழ்த்து கூறியுள்ளார். இதுபற்றி பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதோடு, படத்தையும் வெளியிட்டுள்ளார்.நேற்று இந்த சந்திப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும்...
20.07.2015
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகர்களில் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர்கள் அஜித், விஜய். இவர்களுக்கு அடுத்த இடத்தில் சூர்யா, விக்ரம் உள்ளனர்.இனி இவர்கள் படங்கள் பெரிய பிரச்சனையில் சிக்க வாய்ப்புள்ளது. அது என்னவென்றால் இனி ரூ 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தங்கள் படங்கள் தோல்வி அடைந்தால் சம்பளத்தில் இருந்து 25% விநியோகஸ்தர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்.ஆனால், இந்த 25%...
20.07.2015
மறைந்த "மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவைப் போற்றும் வகையில், இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் சென்னையில் வருகிற 27-ஆம் தேதி இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை (ஜூலை 27) மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த இசை அஞ்சலி நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் இளையராஜாவின் குழுவினர், எம்.எஸ்.விஸ்வநாதனின் சாகாவரம் பெற்ற பாடல்களை இசைத்துப் பாடுகின்றனர். எம்.எஸ்....
22.06.2015
(தமிழனுக்கு எங்சியது இது மட்டும்தான்) கிழக்கு மாகாணசபையில் 170 தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு தற்போதைய ஆட்சி மாற்றத்தினால் கிழக்கு மகாகாணசபையில் தமிழ் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளில் பல முறைக்கேடுகள் நடைபெறுகிறது. சுகாதார அமைச்சின் கீழ் கிழக்கு மாகாணம் முழுவதுமாக 419 சுகாதார சிற்றூழியர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளது. இன விகிதாசார அடிப்படையின் கீழ் தமிழர்களுக்கு 170...
21.06.2015
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள சிகப்பழகு கிரீம் விளம்பர வாய்ப்பை மறுத்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். நம்முடைய இயற்கையான நிறத்தை எந்த சிகப்பழகு கிரீம்களினாலும் மாற்ற முடியாது என்பதுதான் உண்மை என்றாலும், சிகப்பு மட்டும் தான் அழகு என்று தொடர்ந்து விளம்பரம் செய்வதன் மூலம், கறுப்பு மற்றும் மாநிறத்தவர்களை தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளி வருகிறார்கள் பல திரைப்பட...
19.06.2015
மாவை சேனாதிராசாவுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதில் கடிதம்! இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கில்லை. ஆனால் ஜனாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு குறித்துப் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளதால் இக்கடிதத்தை எழுதுகின்றேன். கௌரவ மாவை சேனாதிராஜா, (பா.உ), தலைவர், தமிழரசுக்கட்சி. அன்புடையீர், தங்கள் 11.06.2015 திகதிய கடிதத்தை இன்றே (17.06.2015) கண்டேன். முன்னர்...
18.06.2015
கிழக்கு மாகாணசபையின் நிதியொதுக்கீடுகளில் தமிழ் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதாக கோரி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி துண்டுப்பிரசுர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. கிழக்கு மாகாணசபையின் ஊழலை வெளிபடுத்துவோம் என்ற தொனிப்பொருளில் இந்த துண்டுப்பிரசுர போராட்டம் இன்று ஞாயிpற்றுக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிப்பொதுச்செயலாளர் ஜோர்ஜ்பிள்ளையின்...
18.06.2015
ரெலோ கட்சியானது தமது சின்னத்தில் தனித்து நின்று போட்டியிட்டு முடிந்தால் வெற்றி பெற்றுக் காட்டுங்கள். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கோவிந்தன் கருணாகரனிடம் சவால் விட்டுத்துள்ளார். 16.06.2015 அன்று கிழக்கு மாகாணசபை அமர்வில் கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார அமைச்சு மூலம் ஒதுக்கப்பட்ட...
25.05.2015
இந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்று கூறும் அளவிற்கு வளர்ந்து விட்டார் ஸ்ருதி. இவர் நடிப்பில் சமீபத்தில் பொலிவுட்டில் வந்த ‘கப்பர் இஸ் பேஸ்’ படம் ரூ 100 கோடி வசூல் எட்டவுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய்-அஜித் இருவருடனும் ஸ்ருதி நடித்து வரும் நிலையில், அண்மையில் அஜித் பற்றி தன் டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்தார். இதை கண்ட விஜய் ரசிகர்கள் பலர், ஏன் புலி...