நாவல் தோட்டத்தில் சிறுவர்களுக்கு ஒருவித தொற்றுநோய்

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட நாவல் தோட்ட கிராமத்தில் உள்ள பல சிறுவர்களுக்கு ஒரே விதமான தோல்தொற்று நோய் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ ஆய்வு அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. குறித்த பிரதேசத்திற்கு அலுவலக ரீதியாக விஜயம் செய்த முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் வீதியில் நின்று சிறுவர்களுடன் உரையாற்ற முற்பட்ட வேளையில் மேற்படி தொற்றுநோய் அவதானிக்கப்பட்டது. இதனை புகைப்படம் எடுத்ததுடன் மாவட்டத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி னுச.சதுர்முகத்திடம் கொடுத்து அறிக்கை கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது.