1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் 31 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது

நாடு பூராகவும் 1000ம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 103 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 31 பாடசாலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கான கலந்துரையாடல் தொடர்பாக கூட்டங்கள் வலயமட்டத்தில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஷாம் தலைமையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.