மாகாணசபை உறுப்பினரின் நிதி ஒதுக்கீடுகள்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம் அவர்களின் நிதி ஒதுக்கீடுகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேத்தாளை சிவன் கோயில் புணருத்தானத்திற்கு 3 இலட்சம் ரூபாவும், வாழைச்சேனை இந்துக் கல்லூரிக்கு விளையாட்டு உபகரணம் கொள்வனவிற்கு 1.5 இலட்சம் ரூபாவும,; வட்டவான் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு 2.5 இலட்சம் ருபாவும், பனிச்சங்கேணி முருகன் கோவிலுக்கு 3.5 இலட்சம் ரூபாவும், பனிச்சங்கேணி ஊர் வீதி புணரமைப்பிற்கு 2.5 இலட்சம் ரூபாவும,; தேவபுர மின்சாரம் வழங்குவதற்கு 3 இலட்சம் ரூபாவும், பேத்தாளை முருகன் கோவில் வீதியிற்கு 1 இலட்சம் ரூபாவும் வழங்கியுள்ளார்.