மட்டக்களப்பில் இரவுவேளையில்; ஏற்பட்ட பதற்றம்

மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் கேட்ட வெடிப்பு சத்தம் காரணமாக மட்டக்களப்பில் இன்று இரவு பதற்ற நிலைமையேற்பட்டது.

இன்று இரவு 9.10மணியளவில் இந்த சத்தம் காரணமாக மக்கள் மத்தியில் பதற்ற நிலைமையேற்பட்டது.

கடந்த 21ஆம் திகதி முதல் அச்சத்தில் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் இந்த சத்தம் பதற்றத்தினை ஏற்படுத்தியது.

எனினும் சிலர் மதுபோதையில் மூலவெடிகளை வெடிக்க வைத்ததனால் இந்த சத்தம் ஏற்பட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.