கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் நகரத்திற்கு சென்றதும் கிராமத்தை மறந்து விடுகிறார்கள்.

எமது மாவட்டத்திலே கிராமப்புறங்களே அதிகமாக காணப்படுகின்றது அக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து கல்விகற்று அரச அதிகாரத்தில் அமர்ந்தபின் தாம் பிறந்த இடத்தையே மறந்து விடுகிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த வவுனதீவு பிரதேசம் என மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச தமிழ் மக்கள் விடுலைப்புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் தைரியம் ஜெயந்தினி யின் இல்லத்தில் மக்கள் பணிமனை திறப்பு விழா நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட கட்சியின் சிரே~;ட உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினருமான குமாரசாமி காந்தராஜா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகயில்.. எமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கிராப்புறங்களுக்கு முன்னுரிமைப்படுத்தி வேலைத்திட்டங்களை நடாத்திக் காட்டினார் அந்தவகையில் தான் இந்த வவுனதீவு பிரதேசத்தை தளமாகக் கொண்டு ஒரு கல்வி வலையத்தை உருவாக்கினார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தம் காரனமாக இப்பிரதேசம் கல்வியிலே மிகவும் பின்தங்கி காணப்பட்டது, இன்று வறுமையில் முதலிடத்தில் நிற்கின்றது. இப்பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் பாராளுமன்றம் சென்றிருக்கின்றார் அவர்கள் நகரத்திலே குடியிருப்பதால் இந்த பிதேசத்தை மறந்து போய்விட்டார்கள்.

அன்று எமது தலைவர் சந்திரகாந்தன் தலைமையில் பாதைகளை அமைத்தோம், பாடசாலைகள் அமைத்தோம், பாலங்கள் அமைத்தோம் அப்போது கைட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறினார்கள் எமக்குத்தேவை உரிமயே அபிவிருத்தி தேவையில்லை என்றார்கள். ஆனால் இன்று உரிமையுமில்லை, அபிவிருத்தியுமில்லை என ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் இதை அவர்களுது வாயாலேயே தற்போது அறிக்கையாக விட்டுகொண்டும் அரசாங்கத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர். அன்று அரசாங்கத்தில் இணக்க அரசியல் செய்த நாம் குறிப்பிட்டு சுட்டிக்காட்டக் கூடிய வேலைகளை மக்களுக்கு செய்து கொடுத்தோம் இதை யாரும் மறுக்கமுடியாது.

எமது கட்சியின் தலைவரை சிறைபிடித்து வைத்து விட்டு அரசியல் செய்ய நினைத்தவர்கள், எமது கட்சியை அழிக்க நினைத்தவர்கள் இன்று எங்கள் கட்சி மக்கள் மத்தியிலே பெற்று வரும் செல்வாக்கை கண்டு நடுங்கிபோய் இருக்கின்றார்கள் அவர்கள் நினைத்தது நடைபெறாது என்பது கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் உணர்த்தியிருக்கும். தற்போது மக்களை ஏமாற்றமுடியாது அவர்கள் விழிப்புடன் இருக்கின்றார்கள் அவர்கள் மக்கள் பிதிநிதிகளிடம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் அதர்க்கு உதாரணம் அன்மையில் இப்பிதேசத்தில் நடைபெற்ற குடி நீருக்கான ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் கிளர்ந்தெளுந்தமை. இன்னும் யாரும் மக்களை ஏமாற்ற முடியாது அதர்ககாக எமது கட்சி என்றும் மக்களோடு மக்களாக எமது தலைவர் சந்திரகாந்தனின் பாதையில் தொடர்ந்து மக்கள் பணியை செய்யும் என தெரிவித்தார்.
இன்நிகழ்வில் பிரதேசபை உறுப்பினர்கள்,அமைப்பாளர்கள், பொதுமக்கள், ஊர்பெரியார்கள்,; என பலரும் கலந்து கொண்டனர்.