கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை நாவிதன்வெளி பிரதேச நிருவாக தெரிவும் பத்திரிகையாளர் சந்திப்பும்

(டினேஸ்)

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை நாவிதன்வெளி பிரதேச நிருவாக தெரிவும் பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று 23 ஆம் திகதி அம்பாறை நாவிதன்வெளி கலாச்சார மண்டபத்தின் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி சிவநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ். சர்வானந்தம் பிரதேசவாசிகள் சமூக ஆர்வலர்கள் நலன்விரும்பிகள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் ஆரம்ப நிகழ்வின் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்திற்கான நிருவாக சபை தெரிவு செய்யப்பட்டது அத்ன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி சிவநாதன் ஐ நா மனித உரிமை பேரவையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அதன் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கும்மா !இதில் தமிழ் தலைமைகளின் பங்களிப்பு என்ன? கிழக்கு மாகாணத்தில் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலைகள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.