மட்டக்களப்பு ஆயர் மற்றும் இராமகிருஸ்மிஷன் சுவாமி ஆகியோரைச் சந்தித்தார் வடமாகாண முன்னாள் முதல்வர்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள வடமாகாண சபையின் முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களையும் கல்லடி இராமகிருஸ்ண மிஷன் சுவாமி தக்ஷயானந்தஜீ மகராஜ் அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்ந்திப்பின் போது மட்டக்களப்பு விஜயத்தின் நோக்கம் மற்றும் ஆரம்பிக்கப்பட்ட கட்சின் நிலைப்பாடுகள், தமிழ் தரப்புகளின் தற்போதைய சூழ்நிலை மற்றும் கிழக்கு மாகாணம் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் உபதலைவரும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான சோமசுந்தரம், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் வசந்தராஜா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அருந்தவபாலன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.