171.5 மில்லியன் ரூபாய்கள் எங்கு சென்றது. 2018 கம்பறொளிய திட்டத்தில் பட்டிருப்புத் தொகுதியை ஆட்சியாளர்கள் ஏமாற்றிவிட்டனர் பூ.பிரசாந்தன்

ஆளும் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கம்பெறளிய துரித கிராமிய அபிவிருத்தித்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதியானது முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெருவித்தார் அவர் ஊடகங்களுக்கு வழங்கிய பிரத்தியோக அறிக்கையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
ஆளும் அரசினால் கிராமங்களை துரிதமாக அபிவிருத்தி செய்வோம் என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கம்பறொளிய திட்டத்தில் பட்டிருப்புத் தொகுதி உட்பட பல தமிழ் கிராமங்கள் புறக்கணிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது
தொகுதிக்கு 200மில்லியன் என்ற அமச்சரவை தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் 2018 இல் பட்டிருப்பு தொகுதிக்கு மொத்தமாக 25 வேலைக்கு 28.5 மில்லியன்களே ஒதுக்கப்பட்டுள்ளது. போரதீவுப்பற்றிற்கு 6 வேலைகளுக்கு 7 மில்லியன் மண்முனை தென் எருவில்பற்றுப்பிரதேசத்திற்கு 12 வேலைகளுக்கு 14 மில்லியன களும் பட்டிப்பாளை பிரதேசத்திற்கு 7 வேலைகளுக்கு 7.5 மில்லியன களுமாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கு 200 மில்லியன் என்றல்; மீதான 171.5 மில்லியன் ரூபாய்கள் எங்கு சென்றது. எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுமார் 112 கிராம சேவகர் பிரிவுகளையும் 261 கிராமங்களையும் 137 663 சனத்தொகையினரையும் கொண்டுள்ள தனித் தமிழ் தொகுதியான பட்டிருப்பு தொகுதி 2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் நல்லாட்சி அரசுக்கும், தமிழ் தேசியத்திற்குமே அதிகமான மக்கள் வாக்களித்திருந்தனர்.
மூன்று பிரதேசங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிள் வசமே பிரதேச சபையே ஆட்சி நடத்துகின்றது.
அதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வளிநடத்தும் ஜக்கிய தேசியக் கட்சி அரசே ஆளும் அரசாக உள்ள போதும் கம்பெறளிய திட்டத்தில் பட்டிருப்பு தொகுதி மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்ற வகையில் ஒரு மில்லியன் ரூபாய் வீதம் திட்டம் கொடுத்திருந்தாலும் 200 மில்லியன் ரூபாய்களையும் 112 கிராம சேவையாளர் பிரிவுக்கு கொடுத்திருக்கலாம்.
ஆனால் அரசியல் பிரதிநிதிகள் மூலமான நிதி ஒதுக்கீடு என்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தத்தமது பிரிவுக்கும் இஸ்லாமிய சகோதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் பகுதிக்கும் என பிரித்து நிதி ஒதுக்கீடு செய்தால் பட்டிருப்பு தொகுதிக்கு யார் செய்வது?
இந்நிலை 2019ம் ஆண்டு கம்பெறளிய திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டிலும் ஏற்படக்கூடாது எனவும் குறிப்பிட்ட பூ.பிரசாந்தன்
2019.01.02ம் திகதிய அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய தொகுதிக்கு 300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதே வேளை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் 2019.01.04ம் திகதிய ஆகுஆஆஃனுசுனுஃ01ஃ2019ம் இலக்க சுற்று நிருபத்தின் அ,ஆஇ, பிரிவுகள் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது போல் மாவட்ட செயலாளர் ஊடாக முன்மொழிவுகள் இடம்பெற வேண்டும் என்ற நிலை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் பட்டிருப்பு தொகுதி உட்பட பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் எனறும்; குறிப்பிட்டதுடன் இது தொடர்பாக அமைச்சுக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் பாதிக்கப்படும் பட்டிருப்புத்தொகுதி மக்களுக்கும் ஏனைய தமிழ் கிராமங்களுக்கும் தீர்வு கிடைக்கவில்லையாயின் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்றவகையில் மக்கள் மத்தியில் கொண்டு சென்று தெளிவுபடுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்