ஆரையம்பதியில் இலவச கண் பரிசோதனையும் சத்திரசிகிச்சை முகாமும்.

மட்டக்களப்பு ஆரையம்பதியில் எதிர்வரும் 02-02-2019 சனிக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் 02.00 மணிவரையும் ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கண் சத்திரசிகிச்சை வைத்திய நிபுனர் டாக்டர் பூபாலரெட்ணம் ஸ்ரீகரநாதன் செய்துள்ளார்.
வைத்திய நிபுனரின் தாயாரான திருமதி நல்லமா பூபாலரெட்ணம் அவர்களின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் பிறந்த சொந்த இடமாகிய ஆரையம்பதி மக்களுக்காக இவாறான பாரிய சேவைகளை முன்னெடுப்பதை அவ்வூர்மக்கள் மிகவும் மகிழ்வுடன் வரவேற்கின்றனர்.
கண் பரிசோனையின் போது சத்திரசிகிச்சை அவசியமாக கருதப்படும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக மட்டக்களப்பில் இயங்கிவரும் பு ஏ தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சைகள் நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக வைத்திய நிபுனர் டாக்டர் பூபாலரெட்ணம் ஸ்ரீகரநாதன் மாவட்ட தகவல் திணைக்களத்தின் ஊடகப்பிரிவுக்கு தெரிவித்தார்.
ஆரையம்பதியில் வசிக்கின்ற நாற்பது வயதிற்கு மேற்ப்பட்ட ஆண் பெண் இருபாலாரும் கலந்துகொள்ளலாம் என்றும் அவர்களுக்கு ஏற்படுகின்ற சகல மருத்துவச் செலவினையும் வைத்திய நிபுனர் ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் பல விதமான கண் சிகிச்சை முகாங்களை பாடசாலை மட்டத்திலும் வறியவர்களுக்கான இலவச பரிசோதனைகளையும் நடத்திய வைத்திய நிபுனர் மாவட்டத்தில் முதல்தடவையாக முற்றிலும் இலவசமாக சத்திரசிச்சையை நடத்துவது குறிப்பிடத்தக்கது