ஐ.தே.க பதவிகளில் மாற்றம்

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய சில பதவிகளில் ​நேற்றிரவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற அரசியற்குழு கூட்டத்திலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், கட்சியின் பொதுச் செயலாளராக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். தவிசாளராக அமைச்சர் கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் நவீன் திஸாநாயக்க தேசிய அமைப்பாளராகவும், ​பொருளாளராக இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, துணைத்தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸா மற்றும் கட்சியின் உதவி தலைவரான ரவி கருணாநாயக்க ஆகிய இருவரும் அந்தந்த பதவிகளை தொடர்ந்தும் வகிப்பர் அதற்கான அங்கிகாரத்தை அரசியற்குழு வழங்கியது.

இந்நிலையில், கட்சியின் உதவி பொதுச் செயலாளராக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.