வழக்கு: நாளை வரை ஒத்திவைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை, நாளை (26) வரை ஒத்திவைத்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் இன்று (25) உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது சந்தேக நபரான கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் என்பவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.