கட்டாக்காலி மாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில், பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலிகளால் பொதுமக்களும் வாகன சாரதிகளும் பெரும் அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு பிரதான வீதிகளில் அலைந்து திரியும் பெருமளவிலான கட்டாக்காலி மாடுகளால், அடிக்கடி வீதி விபத்துகள் ஏற்படுவதுடன், வாகன சாரதிகளும் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்பாதையில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், அதிகமான கட்டாக்காலி மாடுகள் நடமாடுவதால், அலுவலகங்களில் இருந்து வீடு செல்வோரும் பாடசாலை மாணவர்களும் பெரும் அவலங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே, புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகள் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.