அமிர்தகழியில் சித்திரை புத்தாண்டு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயக பிரிவின் அமிர்தகழி கிராம இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் அமிர்தகழி கிராம சிரேஷ்ட பிரஜைகளின் ஒத்துழைப்புடன் புதுவருட கலை கலாசார விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நேற்று பிற்பகல் அமிர்தகழி ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது

தமிழ் பாரம்பரிய கலாசாரத்தை நினைவு படுத்தும் வகையில் கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது . இதன்போது போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது

இந்த கலாசார விளையாட்டு நிகழ்வில் அமிர்தகழி கிராம இளைஞர் கழக இளைஞர் ,யுவதிகள் பாடசாலை மாணவர்கள் கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டனர் .