மட்டக்களப்பு பொது கூட்டம்

சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி பிரதேச அமைப்புக்களுக்கான நிர்வாக உறுப்பினர்களை புதுப்பித்தலுக்கான வருடாந்த பொது கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட சமுர்த்தி வலயத்திற்கான சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு மற்றும் அமைப்பின் பதிவை புதுப்பித்தலுக்கான பொதுக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கே ,குணநாதன் தலைமையில் நடைபெற்றது .

இந்த வருடாந்த பொதுகூட்ட நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி நிர்மளா கிரிதரன் ,சமுர்த்தி தலைமையாக முகாமையாளர் திருமதி .செல்வி வாமதேவம் மற்றும் சமுர்த்தி சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்