த.தே.கூ ஆட்சியமைக்க உதவிய கருனா, அருன், வரதர்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுபற்று, மண்முனை மேற்கு பிரதேச சபைகளின் அதிகாரத்தை ததேகூ கைபற்றினர். நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எந்தக்க்சியும் அதிகாரத்தை கைப்பற்றாத நிலையில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கிடையில் வாக்கெடுப்பின்மூலம் சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர்கள் இடம்பெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரத்தை கைப்பற்றுவதர்காக கருணா அம்மானுடன் பேசி அவரின் ஆதரவுடனும், முன்னால் வடகிழக்கு மாகாணமுதலமைச்சரான வரதராஜபெருமாளுடனும் பேசி அக்கட்சியின் ஆதரவுடனும் இம் மூன்று சபைகளையும் ததேகூ கைப்பற்றி இருக்கின்றது.

கடந்த காலங்களில் துரோகி எனவும் தமிழனை காட்டிக்கொடுத்தவன் எனவும் ததேகூ பினராலும், அதன் ஆதரவாளர்களாலும் ஒதுக்கப்பட்டவர்களின் ஆதவு அதிகார மோகத்தாலும் பதவி ஆசையினாம் மறைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

கடந்த தேர்தல் மேடைகளில் கருணாவையும், வரதராஜபெருமாளையும் துரோகி பட்டம் சூட்டி வசைபாடியவர்கள் எதிவரும் தேர்தலில் எதை வைத்து பிரச்சாரம் செய்யப்போகின்றனர்?.. இந்த உள்ளுராட்சி சபைகள் அமைவதன்மூலம் அவை அனைத்தும் மறைக்கப்பட்டு விடுமா??

மற்றும் முன்னால் ஜனாதிபதி மஹிந்தராஜ பக்சவின் உதவியோடு இன்றும் செயற்பட்டுக்கொண்டு கடந்த தேர்தலில் மண்முனை மேற்கில் (வவுனதீவு) மீன் சின்னத்தில் போட்டியிட்டு ஒரு ஆசணத்தைப்பெற்ற அருன் தம்பிமுத்து வின் ஆதரவையும் பெற்று ஆட்சியமைத்ததன்மூலம் மஹிந்தவையும் மன்னித்து வட்டார்களா? தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள்?