தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் 6ஆம் வட்டாரம் கருவேப்பங்கேணி-ஜெயந்திபுரம் போட்டியிடும் வேட்பாளர் காந்தனின் அலுவலகம் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமது வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக வேட்பாளர் காந்தன் தெரிவித்தார்.
இவ் வட்டாரத்தில் போட்டியிடும் ஏனய கட்சி வேட்பாளர்களை விட இவருக்கு அப்பகுதி மக்களின் செல்வாக்கு அதிகமாக காணப்படுவதனாலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.