தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008ம் ஆண்டிற்கு பின்னர் நடைபெறும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அதன் சின்னமான படகு சின்னத்தில் கிழக்குமாணத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்து அதற்கான கட்டுப்பணம் (06.12.2017) செலுத்தியுள்ளது. அத்தோடு அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை 07.12.2017 செலுத்தவுள்ளதாக அதன் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.