பெப்ரவரி 17 அல்லது அதற்கு முன் தேர்தல் - ஆணையாளர்

உள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இன்று (04) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தலுக்காக சுமார் ரூபா 400 கோடி நிதி செலவிடப்படும் எனவும் அதன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில், க.பொ.த. சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கூட்டங்களை மேற்கொள்வோர், பேரணிகளை நடத்துவோர் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் அதன் இதன்போது தெரிவித்திருந்தார்.