இலங்கையில் மீண்டும் எச்1 என்1 தொற்று பரவும் ஆபத்து: யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

இலங்கையில் எச்1 என்1 வைரஸ் தொற்று மீண்டும் பரவக் கூடிய ஆபத்து காணப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாத காலத்தில், நாடு முழுவதும், 500ற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்திய மாகாணத்தில் எச்.1 என்1 வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய மாகாண சுகாதார அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று மாத காலத்தில், இரு கர்ப்பிணிகள் உள்ளிட்ட 17 மரணங்கள் பதிவாகியுள்ளன. 115 நோயாளர்கள் அடையாம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில், மாத்தளை மாவட்டதில் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை அதிக மரணங்கள் கண்டி மாவட்டத்திலே அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.
கண்டி மாவட்டம் - 40 பேர் , மாத்தளை மாவட்டம் - 73 பேர், நுவரெலியா மாவட்டம் - 02 என மொத்தம் 115 நோயாளர்கள் மத்திய மாகாணத்தில் இனம் காணப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 12 மரணங்களும் மாத்தளை மாவட்டத்தில் 5 மரணங்களும் பதிவாகியுள்ளன.
thanks bbc