125 இலட்சம் ரூபா செலவில் வம்மிவெட்டுவான் பாடசாலைக்கு புதிய கட்டிடம்

வாகரை பிரதேசத்தின் பிரதேச அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மூலமான அபிவிருத்தி திட்டத்தில் 125 இலட்சம் ரூபா செலவில் ஒன்றுகூடல் மண்டபமும் வகுப்பறை கட்டிடமும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நிகழ்வு 03ஃ08ஃ2011 ம் திகதி பாடசாலை அதிபர் ஆ.நவரெட்ணராஜா தலைமையில் நடைபெற்றது. கா.பொ.த சாஃத வரை 528 மாணவர்களைக் கொண்ட இப்பாடசாலை 1959 வருடம் ஆரம்பிக்கப்பட்டது. யுத்தம் இயற்கை அனர்த்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இன்று மீளக்கட்டியெழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.