அழியா ஓடை மக்கள் மீள்குடியேற்றம்

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலை அழியா ஓடை கிராம மக்கள் நேற்று தங்களது பகுதிகளில் 5 வருடங்களின் பின்பு மீள்குடியமர்த்தப்பட்டனர்.
இவர்கள் 2006 ஆம் ஆண்டு நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தார்கள். 23 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேர் இவ்வாறு குடியமர்த்தப்பட்டனர். கிரான் பிரதேச செயலாளர் வி.தவராஜா மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எ.எஸ்.எம்.சரீப் ஆகியோர் உணவுப் பொருட்களை வழங்கி மீள்குடியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.