படக்குழு அழைத்தும் விஸ்வாசம் படத்தை பார்க்க மறுத்த நயன்தாரா!

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிக்கெட் புக்கிங் திரையரங்குகளில் வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கியுள்ளார்.

படம் வரும் 10ஆம் தேதி வெளியானாலும் படக்குழுவில் சிலருக்கும் அஜித்தின் மனைவி ஷாலினிக்கும் சில நாட்களுக்கு முன்பே சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டப்பட்டது. ஆனால் இந்த காட்சிக்கு படத்தின் கதாநாயகி நயன்தாரா வரவில்லை.

இது ரசிகர்களிடையே சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து, படத்தை முன்கூட்டியே பார்ப்பதை விட மக்களுடன் மக்களாக சேர்ந்து பார்க்க தான் நான் ஆசைபடுகிறேன் என்று நயன்தாரா கூறியதாக அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.