லவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு

தங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது. டான்ஸ் ஹீரோ ஒருவரோடு அவர் சேர்ந்து நடித்த படம் சமீபத்தில் வெளியானது. ரொமான்ஸுக்குப் பேர் போன டான்ஸோடு, தங்கச்சி நடிகைக்கு ஃபயர் பற்றிக்கொண்டதாகத் தகவல்.

இவரைவிட அவருக்கு இரு மடங்கு வயசு அதிகமாச்சே என்று கேட்டால், லவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு என்று தத்துவம் பேசுகிறார்கள் சம்பந்தப்பட்ட படக்குழுவினர். டான்ஸு வாழ்க்கையில் இன்னும் எத்தனை காதல் புயல் வீசுமோ என்று அங்கலாய்க்கிறார்கள் அவரது ரசிகர்கள்.