3டியில் எடுத்து ரசிகர்களைக் கிளுகிளுக்கச் செய்ய உள்ள பார்பி!

நெட்டில் அது மாதிரி விஷயங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு சவிதா பாபியை நிச்சயம் தெரியும். நம்மூர் சரோஜாதேவி கதைகளை மாதிரி காமிக்ஸ் வடிவில் பச்சையாக உருவாக்கி இருக்கிறார்கள். இணையத்தில் இறவாப் புகழ் பெற்றுவிட்ட சவிதா பாபியைத் தழுவி சவிதா பார்பி என்கிற அஜால் குஜால் படம் இந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

படத்தை 3டியில் எடுத்து ரசிகர்களைக் கிளுகிளுக்கச் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். சவிதா பார்பியாக நடிக்க இருப்பவர் கெஹானா. இவர், மாயா அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும், இறவாக்காலம் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த மாதிரி ரோலில் நடிக்கிறீர்களே? என்று கேட்டால், அந்த விஷயம் இல்லாமல் நாமெல்லாம் பிறந்திருப்போமா? என்று நெத்தியடியாகக் கேட்கிறார்.