இணைந்த விஜய் சேதுபதி அஞ்சலி

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களுக்குப் பிறகு இயக்குனர் அருண்குமாருடனும், இறைவி படத்துக்குப் பிறகு அஞ்சலியுடனும் இணைந்து விஜய் சேதுபதி பணியாற்றும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இந்த படத்தில் லிங்கா, விவேக் பிரசன்னா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, விஜய் கார்த்திக் கண்ணன். இசை, யுவன்சங்கர்ராஜா. ஆக்‌ஷன் திரில்லர் படமான உருவாகும் இதன் படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடக்கிறது