‘கர்ப்பம் இல்லை

கடந்த சில நாட்களாக இணைய தள பக்கங்களில் இலியானா வெளியிட்ட படங்களில் தொள தொள உடைகளுடன் தோற்றம் அளித்தார். வழக்கமாக இறுக்கமான உடைகளை அணிந்து கிளாமராக போஸ் தருபவர் திடீரென்று லூஸான உடைகளை அணிந்ததால் அவர் கர்ப்பமாக இருப்பதாக கிசுகிசு பரவியது. ஏற்கனவே இலியானா தனது பாய்பிரண்ட் ஆண்ட்ரு நியூபோனை காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவரை திருமணம் செய்துகொண்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் எதையும் இலியானா பகிரங்கமாக உறுதி செய்யவில்லை. அதேசமயம் ஆண்ட்ருவுடன் டேட்டிங் செய்வதைவும் நிறுத்தவில்லை.

ஒரு கட்டத்தில் சூசகமாக அவரை கணவர் என குறிக்கும் வகையிலும் மெசேஜ் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தான் இலியானா கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது. அதைகேட்டு அமைதி காத்து வந்த இலியானா மேலும் அதேபோன்று கிசுகிசு பரவியதையடுத்து தடாலடியாக பதில் அளித்திருக்கிறார். ‘கர்ப்பம் இல்லை’ என ஒரு மெசேஜில் குறிப்பிட்டிருக்கும் இலியானா மற்றொரு மெசேஜில், ‘நல்ல மனம் கொண்டவர்கள் இருங்கள், கெட்ட மனம் கொண்டவர்கள் வெளியேறுங்கள்’ என கடுப்படித்திருக்கிறார்.