ஓவியா இடத்தை பிடித்த ஆத்மிகா

யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் படங்களை இயக்கியவர் டீகே. அடுத்து காட்டேரி படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக வைபவ் நடிக்கிறார். ஹீரோயினாக நடிக்க வரலட்சுமி, ஓவியா, சோனம் பஜ்வா ஒப்பந்தமானார்கள். ஷூட்டிங் துவங்கிய நிலையில் ஓவியா திடீரென விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக மீசைய முறுக்கு பட ஹீரோயின் ஆத்மிகா தேர்வாகியுள்ளார். யாமிருக்க பயமே படத்தை போல இதுவும் காமெடி கலந்த பேய் கதை படமாக உருவாகிறது.