விஜய்யின் 62வது படம்- லிஸ்டில் இருக்கும் 2 நாயகிகள், இசையமைப்பாளர் இவரா?

ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடிக்கு வசூலித்துள்ளது.

விரைவில் படம் ஐ பட வசூல் சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் 62வது படத்தை பற்றிய பேச்சுகள் வர ஆரம்பித்துவிட்டன. முருகதாஸுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைவதால் படத்திற்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் நாயகி யார் என்ற வேட்டையில் படக்குழு ராகுல் ப்ரீத் அல்லது பாலிவுட் நாயகி சோனாக்ஷியை கமிட் செய்த யோசித்து வருகின்றனராம்.

அதோடு விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் இப்படத்தில் கமிட்டாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.