பிரபாகரனின் வாழ்வை மையமாகக் கொண்ட ‘ஒக்கடு மிகிலடு’ திரைப்பட டிரெய்லர்!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கைச் சித்திரத்தை மையமாக வைத்து தெலுங்கில் ஒக்கடு மிகிலடு என்றொரு திரைப்படம் தயாராகி வருகிறது.

இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நாயகனாக நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் இயக்குனர் அஜய் ஆண்ட்ரூஸ் நுதாக்கி.

திரைக்கதையை கோபி மோகன் எழுத சிவா ஆர் நந்திகம் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை பத்மஜா ஃபிலிம்ஸ் இந்தியா பிரவேட் லிமிடெட் பேனரில் எஸ். என் ரெட்டி மற்றும் லஷ்மி காந்த் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஒக்கடு மிகிலடு திரைப்படம் உலகம் முழுக்க நவம்பர் 10 ஆம் திகதி பிரமாண்டமாக வெளியிடப்படவிருக்கிறது என படப்பிடிப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

அத்திரைப்படத்துக்கான முதல் டிரெய்லர் கடந்த ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட போது உலகம் முழுவதிலும் உள்ள தமிழீழ ஆதரவாளர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது அத்திரைப்படத்திற்கான இரண்டாவது டிரெய்லர் நேற்று முன்தினம் நவம்பர் 1 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்டு உலகம் முழுவதுமுள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மற்றும் புலம் பெயர் தமிழர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.