நடிகை அசினுக்கு பெண் குழந்தை

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அசின் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தமிழில் கஜினி, போக்கிரி, சிவகாசி உள்ளிட்ட படங்களிலும், ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களிலும் கதாநாயகியாக நடித்து இருப்பவர் அசின். இவருக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு, அசின் திரையுலகை விட்டு விலகினார்.
இதற்கிடையே, அசின் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இத்தகவலை அசினும், ராகுல் சர்மாவும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். தேவதை போன்ற பெண் குழந்தை தங்கள் குடும்பத்துக்கு வந்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.