பொங்கலுக்கு களத்தில் சூர்யாவுடன் மோதும் இரண்டு படங்கள்

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது, அதிலும் சொடுக்கு பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில் பொங்கலுக்கு தானா சேர்ந்த கூட்டத்துடன் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தை ரிலிஸ் செய்யலாம் என யோசித்து வருகின்றனர்.

இவர்கள் ஒரு பக்கம் யோசிக்க பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடிக்கும் மன்னர் வகையறா படம் பொங்கலுக்கு வருகின்றது என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர்.

இதில் எந்த படம் வருகின்றது, எது பின் வாங்குகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.