தமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்

மெர்சல் படம் வெளிவந்து வசூலை வாரி குவித்து வருகின்றது. இந்த நிலையில் இப்படம் ரூ 170 கோடியை எட்டிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே எந்திரன், பாகுபலி-2 ஆகிய படங்கள் மட்டுமே ரூ 100 கோடி தமிழ்நாட்டில் மட்டும் வசூல் செய்தது.

பெரிதும் எதிர்ப்பார்த்த கபாலி, வேதாளம், விவேகம், தெறி, பைரவா என பல படங்கள் இந்த சாதனையை முறியடிக்க தவறியது.

ஆனால், மெர்சல் வெளிவந்த சில நாட்களிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ 100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இன்னும் சில தினங்களில் மெர்சல், எந்திரன் சாதனையை முறியடித்து ஆல் டைம் நம்பர் 2-விற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.