அடுத்த மோதலுக்கு தயாராகும் அஜித் - விஜய்

தெறி படத்தை தொடர்ந்து ‘இளைய தளபதி’ விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடிக்கவுள்ளார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை விஜய் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளார்.

அதேபோல் வேதாளம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட அஜித், தற்போது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் லண்டன் செல்லவிருக்கும் இவர், ‘தல 57′ படத்துக்கான பூஜையை மே மாதத்தில் வைத்து படத்தை ஜூனில் தொடங்க திட்டமிட்டுள்ளார். இவ்விரு படங்களும் இவ்வருட இறுதியில் ஒரே நாளில் வெளியாகலாம என்று எதிர்பார்க்கப்படுகிறது