சூப்பர் ஸ்டார் படத்துக்கு அனிருத் இசை!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் என டாப் நடிகர்களின் படத்துக்கு இசையமைத்து வெற்றி இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத்.
இந்நிலையில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான பவன் கல்யாண் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்.
எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் குஷி 2வில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வந்துள்ளன. ஆனால் அச்செய்திகள் இன்னும் உறுதியாகவில்லை.
இந்நிலையில் இப்பட தகவல்கள் உறுதியானால் அதில் இசையமைப்பாளராக அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.
பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இப்படத்தை North Star Entertainments பேனரில் ஷரத் மரார் தயாரிக்க இருக்கிறார்.