ஹெட்ரிக் ஜோடி

விஜய் நடிக்கவுள் அடுத்தத் திரைப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக காஜலுக்கு இரண்டரை கோடி இந்திய ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி, ஜில்லா திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த காஜல் அகர்வாலை, விஜய்யே சிபாரிசு செய்ததாகவும், அதனாலேயே அவருக்கு இரண்டரை கோடி சம்பளம் கொடுத்துள்ளதாகவும் தகவல். தெறி படப்பிடிப்பு முடித்த கையோடு விஜய்யின் 60ஆவது திரைப்படத்தின் பூஜை, விஜயா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் மிக எளிமையான முறையில் அண்மையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் பாரதி ரெட்டி, இயக்குநர் பரதன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உட்பட ஒரு சிலர் மட்டுமே இந்த பூஜையில் கலந்துகொண்டதுடன் விஜய் வரவில்லை.