ராஜபக்சே நண்பரின் குடும்ப விழா – கலந்து கொள்வாரா விஜய்?

கத்தி படம் ஆரம்பித்ததில் இருந்தே பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. அதில் மிகவும் பெரிய பிரச்சனை ராஜபக்சேவின் நண்பர் கத்தி படத்தை தயாரிப்பது. பின் நாளடைவில் அப்பிரச்சனை வந்த வேகத்திலேயே போய்விட்டது.இப்போது ஒரு புது பிரச்சனை உருவாகியுள்ளது. லைகா புரொடக்ஷன் நிறுவனர் அல்லிராஜாவின் குடும்ப விழாவுக்கு இன்னும் சில நாட்களில் விஜய் லண்டன் செல்லப் போகிறார் என்பதே அது. அல்லிராஜாவின் தாயார் ஞானம் அம்மாளின் பிறந்தநாள் விழா விரைவில் லண்டனில் நடைபெறவுள்ளது.எனவே தான் தயாரித்துக் கொண்டிருக்கும் கத்தி படத்தின் படக்குழுவினரை அத்தனை பேரையும் லண்டனுக்கு அழைத்திருக்கிறார் அல்லிராஜா.இதற்காக அவர்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது.இதனிடையில் லண்டன் வரயிருக்கும் கத்தி படக்குழுவினர்களுக்கு, அங்கிருக்கும் தமிழ் மக்கள் கருப்புக் கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டும் இருக்கின்றனர்.தமிழ் மக்களின் உணர்வை மதிக்க தெரிந்தவர் விஜய். எனவே தமிழ் மக்களை விஜய் எப்போதும் ஏமாற்ற மாட்டார்.