மீண்டும் வருகிறார் ஐஸ்வர்யா ராய்!

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் கதாநாயகி ஐஸ்வர்யா ராய். இவர் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்த பிறகு நடிப்பதை குறைத்துவிட்டார், அதிலும் குழந்தை பிறந்த பிறகு முற்றிலுமாக நடிப்புக்கு முழுக்குப் போட்டார்.தற்போது உடல் எடையெல்லாம் குறைத்து மறுபடியும் நடிக்க ரெடியாகிவிட்டார், 'கான்டே, ஷுட் அவுட் லோகன்ட்வாலா, ஷுட் அவுட் வடாலா' ஆகிய படங்களை இயக்கிய சஞ்சய் குப்தா அடுத்து இயக்கப் போகும் 'ஜாஸ்பா' என்ற படத்தில்தான் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கப் போகிறார்.இதில் இவருடன் ஜான் ஆபிரகாமும் நடிக்கவுள்ளார், மேலும் ஐஸ்வர்யா 5 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.