தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா?

மோகித் சூரி இயக்கத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ஷ்ரத்தா கபூர் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த இந்தித் திரைப்படம் ‘ஏக் வில்லன்’.

படம் வெளியான முதல் வாரத்திலேயே இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய வசூலைக் குவித்த படம் என்ற பெயரைப் பெற்றது. இதன் மூலம் சல்மான் கான் நடித்த ‘ஜெய் ஹோ’ படத்தையடுத்து இரண்டாவது இடத்தையும், அக்ஷய் குமார் நடித்த ‘ஹாலிடே’ படத்தையும் பின்னுக்குத் தள்ளியது.

மேலும் படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வெளிவந்ததால் இந்த வாரத்திலேயே படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி விடும் என்று சொல்கிறார்கள். ‘ஜெய் ஹோ’ படத்தின் முதல் வார வசூல் 88 கோடி ஆகும். ‘ஹாலிடே’ படம் 68 கோடி ரூபாயை முதல் வார வசூலாகப் பெற்றது.

‘ஏக் வில்லன்’ படத்தின் முதல் வார வசூல் 77 கோடி ரூபாயாகும். பாலிவுட்டில் அடுத்த சில வாரங்களில் வெளி வரும் படங்கள் இப்படி நல்ல வசூலைக் கொடுத்து வருவது அங்குள்ள வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாம். இத்தனைக்கும் ‘ஏக் வில்லன்’ படத்தின் ஹீரோக்கள் முன்னணி ஹீரோக்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.