தமிழ்த்;;;;;;;;;;;;;;;;;; தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்? - தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்

அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம். அதில் அறிவுபூர்மான அணுகு முறைகளும் பரிசோதனை
முயற்சிகளும் தேவை.
இன்று நாட்டில் எழுந்துள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய
வேண்டும் என்பதையிட்டு இப்பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பெற்ற விடயத்தை அடிப்படையாக
வைத்துச் சில ஆலோசனைகளைத் தமிழர்களுடைய அரசியல் அரங்கில் முன் வைக்க விரும்புகின்றேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மகிந்தராஜபக்ச அவர்களைப் பிரதமராக நியமித்தது
சரியா? பிழையா? என்ற அரசியலமைப்பு வியாக்கியானங்களுக்குள் செல்லாமல்ரூபவ் சரி எது?
பிழை எது? என்பதற்கு அப்பால்ரூபவ் யார் சரி? யார் பிழை? என்பதற்கு அப்பால்ரூபவ் இன்று
எழுந்துள்ள அரசியல் சூழ்நிலையைத் தமிழர் தரப்பு எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
என்பதே நான் முன்வைக்கவுள்ள ஆலோசனைகளுக்கான அடிப்படையாகும்.
2015 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பெற்ற ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் இதுகாலவரையிலான
மூன்றரை வருட காலத்தில் அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களும் பிரதமர்
ரணில்விக்கிரமசிங்க அவர்களும் இணங்கியிருந்த இக் காலத்தில் உருப்படியாக எதனையும்
தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்க இயலவில்லையென்றால்ரூபவ் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்
பிரதமராகத் தொடர்ந்து இருப்பதாக ஒரு வாதத்திற்கு எடுகோளாக வைத்துக் கொண்டு
நோக்குவோமானால் நடைமுறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களும் பிரதமராக
ரணில்விக்கிரமசிங்க அவர்களும் பிணங்கியிருக்கப் போகின்ற இந்த அரசாங்கத்தின் மீதி
ஒன்றரை வருட காலத்தில் தமிழர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏதாவது நன்மைகளைப்
பெற்றுக் கொடுக்க முடியுமா? என்ற கேள்விக்கு விடை ‘இல்லை’ என்பது எவரும் விளங்கிக் கொள்ளக்
கூடிய எளிய எண்கணிதமாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு
ஆதரவளிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை என்பது ‘உள்ளங்கை
நெல்லிக்கனி’ போல் மிகத் தெளிவானது.
இன்று நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில் சிங்களச் சமூகத்தின் மிகப்
பெரும்பான்மையானவர்களும் முப்படைகளும் பொலிசாரும் மகாசங்கத்தினரும் ஜனாதிபதி
மைத்திரிபாலசிறிசேனா மற்றும் புதிதாக அவரால் பிரதமராக நியமிக்கப்பெற்றுள்ள

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் பக்கமே நிற்கின்றனர் என்ற யதார்த்தத்தைத் தமிழர்
தரப்பு அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிங்கள சமூகத்தின் உளவியலையும் - மனோநிலையையும் புறந்தள்ளிவிட்டு வெறுமனே
கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் அரசியலமைப்பு வியாக்கியானங்களையும் முன்வைப்பது
பொருத்தமான – புத்திசாலித்தனமான அணுகுமுறையாகாது.
ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சி அலகை உள்ளடக்கிய புதிய
அரசியலமைப்புக் கோரிக்கையும் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கையும் தமிழர்
தரப்பில் நியாயமானதாக இருந்தாலும்கூட சிங்களச் சமூகத்தின் மனதை வெல்லாமல் பாராளுமன்ற
அரசியல் வழிமுறைகளினூடாக மேற்படி கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான சாத்தியமே இல்லை.
எனவே இன்றைய அரசியல் சூழ்நிலையில் நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை நிபந்தனைகளாக
விதிப்பது அறிவுபூர்வமானதல்ல.
‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும்’ என்பதற்கிணங்க நடைமுறைச் சாத்தியமான
விடயங்களாகவுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அரசியல் தீர்மானம்ரூபவ் படையினர் வசமுள்ள
தனியார் காணிகளின் விடுவிப்புரூபவ் புதிய அரசியலமைப்பு சாத்தியமாகும் வரைக்கும் காத்திராமல்
ஏற்கெனவே கையிலுள்ள பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தினை முழுமையாக அரசியல்
விருப்பத்துடன் அமுல் செய்தல் போன்ற கோரிக்கைகளை ஜனாதிபதியிடமும் புதிதாக
நியமிக்கப்பெற்றுள்ள பிரதமரிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கலாம். நாளைவரும்
பலாக்காயிலும் பார்க்க இன்றுவரும் கிளாக்காய் நன்று. வடக்குகிழக்கு இணைந்த மொழிவாரி மாநில
சுயாட்சி இல்லாமல் புதிய அரசியலமைப்பொன்று வருவது தமிழர்களைப் பொறுத்தவரை தேவையற்றது.
இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் மூலம் கொண்டு வரப்பெற்ற பதின்மூன்றாவது அரசியல்
சட்டத்திருத்தத்தின் வாயிலாக ஏற்படுத்தப்பெற்ற மாகாணசபைகள் சட்டத்தின்; ஷரத்துக்கள்
அவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பெற்ற 1987 இலிருந்து இன்றுவரை அவ்வொப்பந்தத்தில் கைசாத்திட்ட
முன்னாள் ஜனாதிபதிகளான காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மற்றும் பின்னர் வந்த
ஜனாதிபதிகளான காலஞ்சென்ற ஆர்.பிரேமதாச மற்றும் காலஞ்சென்ற டி.பி.விஜயதுங்க
ஆகியோராலும் அதன் பின்னர் ஜனாதிபதி பதவிகளை ஏற்ற சந்திரிக்கா மற்றும்
மகிந்தராஜபக்ச ஆகியோராலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களாலும்
அதன் நோக்கம் அர்த்தமுள்ள வகையில் அரசியல் விருப்பத்துடன் இன்னும் முழுமையாக அமுல்
செய்யப்பெற்று நிறைவேற்றப் பெறவில்லை. அதற்கான அரசியல் அழுத்தம் தமிழர்
தரப்பிலிருந்தும் இதுவரை முறையாகக் கொடுபடவும் இல்லை. இது அதற்கான அரிய சந்தர்ப்பம்.
இந்தியா கூட இது விடயத்தில் இராஜதந்திரரீதியாக உதவ முன்வரலாம்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குத் தமிழ் ஆளுநர்களை நியமித்தல்ரூபவ் உதாரணமாக அம்பாறை மாவட்டத்தில்
கல்முனைத் தமிழ்ப் (உப) பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தல்ரூபவ் திருகோயில் பிரதேச செயலாளர்
பிரிவில் நிலவும் வட்டமடு மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கான தீர்வுரூபவ் பொத்துவில் கனகர் கிராம
மீள்குடியேற்றம் போன்ற இன்னோரன்ன அனுகூலங்களைக் கூடக் கேட்டுப் பெற்றுக் கொள்ளக்
கூடிய காலகட்டம் இது.
எல்லாவற்றையும் ‘முள்ளிவாய்க்கால்’ யுத்தத்தை வைத்துக் கொண்டே தீர்மானிக்கக் கூடாது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த கையோடு நடைபெற்ற 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்
போது இந்த யுத்தத்திற்கு இராணுவத் தலையேற்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்களைத்
தமிழர் தரப்பு அன்று ஆதரித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பார்வையில் தவறில்லை என்று
எடுத்துக் கொண்டால் யுத்தம் முடிந்து சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த யுத்தத்திற்கு
அரசியல் தலைமையேற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சாவை இன்று ஆதரிப்பதும்
தவறில்லைத்தானே.
அன்று ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தராஜபக்ச அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட
சரத்பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் தமிழர்கள் மீது முன்னாள் ஜனாதிபதிக்கு வன்மம் ஏற்பட
வழியெடுத்துக் கொடுத்ததேயொழிய – தீமை ஏற்பட்டதேயொழிய – தமிழர்களுக்கு எந்த நன்மையும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அன்றைய அரசியல் நிலைப்பாட்டினால் ஏற்படவில்லை. அதற்குப்
‘பிராயச்சித்தம்’ தேடக்கூடிய சந்தர்ப்பம் இப்போது கதவைத் தட்டுகிறது. தமிழர் தரப்பு இதனை நழுவ
விடக்கூடாது.
பாராளுமன்ற அரசியல் வழிமுறைகளுக்கூடாக எவற்றைச் சாதிக்கலாம் அதற்கு வெளியே எவற்றைச்
சாதிக்கலாம் என்ற தெளிவான நிகழ்ச்சி நிரல் இல்லாமல் தமிழரசுக் கட்சிக் காலத்திலிருந்து
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காலம்வரையிலான தமிழர் தரப்பின் வினைத்திறனற்ற
‘ஏட்டுச்சுரக்காய்’ அரசியல்தான் தமிழ்ச் சமூகத்தின் சமூக பொருளாதார அரசியல்
பின்னடைவுகளுக்கு முக்கிய அடிப்படைக் காரணமாகும்.
மேலும். முள்ளிவாய்க்கால் யுத்தத்தைக் காரணமாக வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச
அவர்களைப் பரம எதிரியாகக் காலம் முழுவதும் வைத்துக் கொண்டு தமிழர் தரப்பு எதனைச் சாதிக்கப்
போகிறது. பழி தீர்த்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடுமா? தமிழர்களைப் பொறுத்தவரை
ஐக்கிய தேசியக் கட்சியென்றாலும் சரிதான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியென்றாலும் சரிதான்
இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். கால நேரம் அறிந்து தமிழர்களுக்கு
நன்மையளிக்கக் கூடிய வகையில் இவ்விரண்டு கட்சிகளையும் அரசியல் சாணக்கியத்தோடு கையாள்வதுதான்

உகந்த அணுகுமுறையாக இருக்க வேண்டுமே தவிர அவற்றுடன் கச்சை கட்டிக் கொண்டு நிற்பதல்ல. அதுதான்
அரசியல். போராட்டம் என்பது வேறு. அது பற்றி விபரிப்பது இப் பத்தியின் நோக்கமல்ல.
இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ அல்லது பாராளுமன்றக் குழுக்களின்
பிரதித்தலைவர்; பதவியோ அல்லது மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் இணைத்தலைமையோ
தமிழர்களுக்கு எதனையும் பெற்றுத் தரப் போவதில்லை. இப்பதவிகளைவிட அரசியல் கைதிகளின்
விடுதலையும்ரூபவ் படையினர் வசமுள்ள காணி விடுவிப்பும் ரூபவ்பதின்மூன்றாவது அரசியல் சட்டத்
திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலும் ஆயிரம் மடங்கு அவசியமானவை. இவற்றைப் பெற்றுக்
கொள்ள தமிழர்

தரப்பிற்கு இன்று தேவையானது பகைவனுக்கு அருளும் மனப்பக்குவம் ஆகும். இதனைத்தான் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு இன்று செய்ய வேண்டும்.