இலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு! புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்து சமுத்திரத்தின் முத்தாக கருதப்படும் இலங்கை இயற்கை பேரழிவுகள் குறைவான நாடாக கடந்த காலங்களில் கூறப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் அவ்வாறான சாத்தியங்கள் குறைவென புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து தரைமட்டமாவதோடு பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக பூமித் தட்டுக்களின் எல்லைக்கு அப்பாலும், இந்திய பூமித் தட்டுக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இலங்கையை அண்மித்த பகுதியில் புதிய பூமித் தட்டு உருவாகியுள்ளமையே இதற்கு காரணமாகும்.
இதனை இலகு மொழியில் கூறினால் இலங்கைக்கு அருகில் இந்திய கண்டங்களின் பூமித் தட்டு ஒரு பகுதி இரண்டாக பிரிந்து காணப்படுகின்றமை இதற்கு காரணமாகும்.
81 வருடங்களுக்கு பின்னர் நேபாளத்தில் ஏற்பட்ட பூதி அதிர்வில் ஆயிரம் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர் தொடர்ந்து பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
தற்போது எந்த இடங்களில் நில அதிர்வுகள் ஏற்படும் என ஆராய்வதற்கு பதிலாக அடுத்த நில அதிர்வில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலேயே புவியியலாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தரவுகளுக்கமைய 1905ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரையிலான 110 வருட காலப்பகுதில் தெற்காசியாவில் மாத்திரம் நில அதிர்வில் மாத்திரம் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா, நேபாளம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் மாத்திரமன்றி, நில அதிர்வில் பாதுகாப்பான நாடாக கருதப்படும் இலங்கையும் நில அதிர்வில் பாதிக்கப்பட்டுள்ளது. நில அதிர்வின் முடிவே 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியாகும்.
இந்தியா உட்பட தெற்காசியாவின் மக்கள் தொகை அதிகரிப்பும், நகரமயமாக்கலும், நிதி அதிர்வின் போது ஏற்படுகின்ற உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமாகின்றது.
எதிர்காலத்தில் நில அதிர்வில் உயிரிழக்கும் எண்ணிக்கையை குறைத்துக் கொள்வதற்காக நிதி அதிர்வு ஏற்படுவதற்கு முன்னரே அறிந்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தோல்வியடைந்துள்ளது.
பூமி உருவாகிய நாளில் இருந்து இதுவரையில் பில்லியன் கணக்கிலான ஆண்டுகள் முழுவதும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
உலகில் எவ்வளவு தொழில்நுட்ப உபகரணங்கள் உருவாகியுள்ள போதிலும் நில அதிர்வு ஏற்பட்டு 20 நோடியாகும் வரையில் இது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் தொழில்நுட்பம் ஒன்று இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஒரு நிமிடம் கடந்த பின்னர் நில அதிர்வு தொடர்பில் உலகிற்கு அறிவிக்கும் போதிலும் அதில் சுனாமி ஏற்படுமா இல்லை என்பது தொடர்பில் அறிவிப்பதற்கு மேலும் நேரம் தேவைப்படுகின்றது.
இதன் காரணமாக தற்போது நில அதிர்வொன்று ஏற்பட்டால் அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கு நிச்சியமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.
இலங்கையின் கடந்த காலத்தை கருத்திற்கொள்ளும் பல சந்தர்ப்பங்களில் நில அதிர்வுகள் மற்றும் சுனாமி நிலைமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
போர்த்துகீஸர் ஆட்சி காலத்தில் 1615 ஏப்ரல் மாதம் திகதி கொழும்பில் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக 2000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அது இலங்கையில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பிலான மிக பழையை அறிக்கை ஒன்றாகும்.
பாரிய கட்டடங்கள் இல்லாத அந்த காலப்பகுதியில் 2000 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றால் அது மிகப்பெரிய நில அதிர்வாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1883 ஆம் ஆண்டில் கெக்ட்ரோ தீவில் எரிமலை ஒன்று வெடித்தமையினால் திருகோணமலை மற்றும் காலி துறைமுகத்தில் சுனாமி ஒன்றை காண முடிந்தன என அந்த காலப்பகுதியில் செய்திகள் உட்பட வெளியாகியிருந்தன.
இதேவேளை, கிரிந்த, திஸ்ஸமஹராமை, லுனுகம்வெஹர, அனுராதபுரம், கெகிராவ, மீரிகமம், மினுவங்கொடை ஆகிய பகுதிகளில் இடைக்கிடை நில அதிர்வுகள் பதிவாகியுள்ள போதிலும், அவை அந்த அளவிற்கு பெரிய அதிர்வுகள் அல்ல. இலங்கை உலகின் பிரதான நிலத் தட்டு எல்லையில் குறிப்பிடத்தக்க தூரத்தில் அமைந்துள்ளமையே அதற்கு காரணமாகும்.
இலங்கை இந்துமா சமுத்திரம் – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் அமைந்துள்ளது. இந்த தட்டை சுற்றி ஆபிரிக்க பூமித் தட்டு, உயரத்தில் இமாலய பூமித் தட்டு, தெற்கில் அண்டார்டிகா பூமித் தட்டு அமைந்துள்ளது.
இந்த தட்டுகளின் எல்லையை கருத்திற் கொள்ளும் போது இலங்கைக்கு நில அதிர்வு ஏற்படும் எல்லை அமைந்துள்ளது. அதற்கமைய 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமி ஒன்றுக்கு முகம் கொடுக்கும் நிலை இலங்கைக்கு ஏற்பட்டது.
இலங்கைக்கு தெற்கு நீண்ட கடல் எல்லை இந்து – அவுஸ்திரேவிய பகுதிகள் இரண்டு பிளவடைந்து வருகின்றது என புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அது எதிர்காலத்தில் இந்து – அவுஸ்திரேலிய தட்டு மற்றும் இந்து – இலங்கை தட்டு என அடையாளப்படுத்தபடும்.
இந்த பிரிவு இலங்கைக்கு தெற்கில் 500 மற்றும் 1000 கிலோ மீற்றர் தூரத்தில் இடம்பெற்று வருகின்றதென்பது ஆய்வாளர்களின் கருத்தாகியுள்ளது. அந்த இடத்தை பார்க்கும் போது முதலில் சந்திக்கும் இடம் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையிலாகும்.
புதிதாக உருவாகி வரும் நிலத்தட்டு உள்ள இடம் நில அதிர்வு மற்றும் அதில் ஏற்படும் தாக்கத்தினை கருதும் போது அருகிலேயே உள்ளது.
இலங்கைக்கு அருகில் உள்ள பூமித்தட்டு 5 கோடி வருடத்திற்கு முன்னர் இருந்தே பிளவடைய ஆரம்பித்துள்ளதாக ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது முழுமையாக உடைவதற்கு இன்னும் ஒரு கோடி வருடங்கள் செல்லும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளர்.
தற்போதுவரையில் நிலையற்ற புவியியல் சார் மண்டலமாகியுள்ள இந்த புதிய பிளவு மண்டலத்தின் காரணமாக இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியில் மண்சரிவுகள் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5 மற்றும் 5 ரிக்டர் அளவில் இலங்கைக்கு நில அதிர்வு ஏற்பட்டால் அது இந்த நாட்டில் உள்ள கட்டடங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் கட்டடங்கள் நிர்மாணிக்கும் போது அது நில அதிர்வுகளை தாக்குபிடிக்கும் அளவிற்கு நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக ஏற்படகூடிய பாதிப்பு எவ்வளவு என்பதனை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
ரிக்டர் 7க்கு அதிகமான நில நடுக்கம் ஒன்று இலங்கைக்கு அருகில் உள்ள கடலில் திடீரென ஏற்பட்டால் ஏற்பட கூடிய சுனாமியின் பாதிப்பு மதிப்பிட முடியாத ஒன்றாகும்.
எப்படியிருப்பினும் இலங்கையில் நில அதிர்வொன்று ஏற்பட்டால் அதிக பாதிப்பு மலையத்திற்கே ஏற்படும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஏற்படக்கூடிய நில அதிர்வில் நொடிப்பொழுதுகளில் கட்டடங்கள் தரைமட்டமாக கூடும்.
இந்த பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் ஆயத்தமாக வேண்டும். இலங்கைக்கு அருகில் புதிய நில அதிர்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ள நிலையில் நாம் அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு தகுதியான உடல் நிலையுடன் இருக்க வேண்டும் என்பதனை புரிந்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.